செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பாவேந்தர் சாலையில்
நீதி வேண்டும்! ஜெய் பீம் கோசத்துடன் நீதி வெல்லும் என்று சமத்துவத் தலைவர்
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு ஆவணங்களை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றமும் சி பி ஐ யிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் கொலை வழக்கு ஆவணங்களை சி பி ஐ இடம் ஒப்படைக்காமல் அலட்சியம் காட்டி கொலை குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்ச்சி செய்யூம் தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் தலைவர் திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆணைக்கிணங்க மாநில செயலாளர் செய்யூட்டி ஜெகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் படூர் ஆறுமுகம் தலைமையில் கொட்டும் மழையிலும் ஜெய் பீம் என்று நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சியினர்
கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் மல்லை ஆனந்த் மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி
சிறப்பு உழைப்பாளராக கலந்து கொண்ட வழக்கறிஞர் பிரபாகரன் கண்டன உரையாற்றினார் காட்டாங்குளத்தூர் ஒன்றிய பொருளாளர் அருண்.பானு மற்றும்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை செய்யப்பட்ட குற்றவாளிகளை தண்டனை வழங்க கோரி நீதி கேட்டு கோஷம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















