கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், 62வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக திருச்சியில் நடைபெற்று வந்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. கிருஷ்ணரேகா அவர்கள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கபதக்கமும், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும் பெற்றார். மேற்கண்ட தடகளப் போட்டிகளில் வென்ற பெண் தலைமை காவலரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.