நாமக்கல் : தமிழ்நாடு காவல் துறை சார்பில் 62-வது மாநில அளவிலான காவல்துறையினருக்கான தடகள விளையாட்டு போட்டி திருச்சியில் கடந்த (03.03.2023) முதல் (05.03.2023) வரை நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு மண்டலம் காவல்துறை சார்பாக நாமக்கல் மாவட்டம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.முரளிகுமார் அவர்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெ.த.கா. 761 திருமதி.அமுதா என்பவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், எருமப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த த.கா.142 திரு.ரமேஷ் என்பவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், இராசிபுரம் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பெ.த.கா. 1249 திருமதி.அருள்மொழி என்பவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் மற்றும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த மு.நி.கா. 1481 திரு.ராதாகிருஷ்ணன் என்பவர் நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும் வென்று நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர். பதக்கங்கள் வென்ற காவல் ஆளிநர்கள் இன்று 15.03.2023-ம் தேதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன், இ.கா.ப. அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.