சென்னை : (11.03.2022) மாநில அளவில் காவல்துறை அதிகாரிகளுக்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார். இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் அவர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
















