திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் பணிக்கு 02 மோப்ப நாய்களும் (1.ரெமோ, 2.கூப்பர்), குற்ற வழக்குகளுக்கு 1 மோப்ப நாய் (பரணி), மற்றும் போதை பொருட்கள் துப்பறியும் அலுவலில் 1 மோப்ப நாய் (லக்கி) என 4 மோப்ப நாய்கள் தற்போது இருக்கின்றது. இந்நிலையில் மாநகர மோப்ப நாய் பிரிவிற்கு கூடுதலாக நாய் குட்டி ஓன்று வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., ப்ரௌனி ( Brownie ) என பெயர் சூட்டினார். மேலும் மோப்ப நாய்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நன்கு பராமரிக்கவும் மோப்ப நாய் பிரிவு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். உடன் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (கிழக்கு), மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















