திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் 15 வருடங்கள் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 03 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 15 வருடத்திற்குள் உள்ள 1 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 04 காவல் வாகனங்கள் (07.08.2025)-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் (04.08,2025)ஆம் தேதி முதல் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வாகனத்திற்கு ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் 1 காவல் வாகனம் மட்டுமே இயக்க நிலையிலும் மற்ற 3 காவல் வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லாமல் Scrap பயன்பாட்டிற்கு மட்டுமே ஏலம் விடப்படுகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்