தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்கள், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்துகளை நவீனப்படுத்தும் நோக்கில் ரோந்து காவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க வேண்டி ஒரு செயலை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்மூலம் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிமுகப்படுத்திய செயலியை தனது அலுவலகத்தில் இருந்து இன்று துவக்கி வைத்தார்கள். இந்த செயலி மூலம் ஒவ்வொரு காவல் அதிகாரிகளும் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ரோந்து காவலர்களை குறிப்பிட்ட இடத்தில் சரியாக இருந்து பணி செய்கிறார்கள் என அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.மூர்த்தி சட்டமன்றம் ஒழுங்கு மற்றும் துணை ஆணையாளர் பள்ளிக்கரணை ஆகியோர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்