திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அறிவுறுத்தலின் படி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் நீதிமன்ற ஆணை மூலம் இழந்த பணத்தை பெற்று தந்ததற்கு மூத்த குடிமக்கள் நடராஜன் மற்றும் ரங்கராஜன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல் ஆணையரிடம் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இன்று வரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் துரித நடவடிக்கையால், மாநகர சைபர் கிரைமில் பெறப்பட்ட புகார்களில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த ரூ.45,18,258 பணம் மீட்கப்பட்டு புகார்தாரர்களுக்கு கிடைக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















