திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதி மணி, இ.கா.ப, உத்தரவுப்படி மாநகர ஊர்க்காவல் படையினர் (Home Guards) புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் (22.11.2025) அன்று (சனிக்கிழமை) காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை ஆண்கள் 60 நபர்கள் மற்றும் பெண்கள் 05 நபர்கள் என மொத்தம் 65 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(18). வயதிற்கு குறையாமலும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 3.திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 02 (கலர்)கல்வித் தகுதிச் சான்று (அசல் மற்றும் நகல்) ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) இருப்பிடச் சான்று (அசல் மற்றும் நகல்)
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















