திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் இடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா? என்றும் உணவு சமைக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்குமாறும், பாதுகாப்பான முறையில் உணவு தயார்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கு ரத வீதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் திட்டத்தை ஆய்வு செய்து அங்கு உள்ள ஆசிரியர்களுக்கும், அந்த திட்டத்தின் கண்காணிப்பு பொறுப்பாளர்களுக்கும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி