மதுரை: மதுரை மாநகராட்சி தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்டார் குரு டிரஸ்ட், சக்ரா கிராண்ட், கனரா வங்கி மற்றும் அஜீபா ஈவெண்ட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான ”கல்வியை நேசி ! எதிர்காலத்தை சுவாசி!” புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்விக்குழுத் தலைவர் ரவிச் சந்திரன், மேலாண்மை பயிற்சியாளர் பேரா.திருக்கோஷ்டியூர் மணிகண்டன், ரவிஸ் அகாடமி நிறுவனர் முனைவர் எஸ்.இரவிச்சந்திரன், ஸ்டார் குரு டிரஸ்ட் நிறுவனர் திரு.குருசாமி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு ஊக்க உரை ஆற்றினார்கள்.
மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 26 ஆரம்பபள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப் பள்ளிகள் என ,
மொத்தம் 64 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ. மாணவிகள் புத்தாக்கம் பெறுவதற்கு மாநகராட்சியின் சார்பில் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவில் மற்றும் மாநில நடைபெறும் பல்வேறு குறு விளையாட்டு போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டுதல், மற்றும் மேஜிக் ஷோ, புத்தகம் வாசிப்பு, பசுமை நடைபயணம், ஐதராபாத் அறிவியல் மையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுப் பயணம் உள்ளிட்டவை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பள்ளிக்கூடங்கள் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மேநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வியை நேசி எதிர்காலத்தை சுவாசி ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் மதுரை மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாநகராட்சி மேநிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 1350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகதிருக்குமரன், வெள்ளி வீதியார் மாநகராட்சி மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யர், பள்ளி மேற்பார்வையாளர் தனேஸ்வரி, மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















