திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மரிய வாழ்க என வணங்கினர். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது ஒன்பது நாட்கள் நவநாள் மன்றாட்டு சிறப்பு திருப்பலியுடன் நடைபெற்று விழாவின் முக்கிய நாளான முதல் நாள் சனிக்கிழமை இரவு திருப்பலி முடிந்து புனித மகிமை மாதா திருத்தத்தின் திருத்தல அதிபர் வர்கீஸ் ரோசாரியோ அன்னையின் திருச்சூர்வத்தை ஏந்தி தேரில் அமர வைத்து பின்னர் குழந்தை ஏசு, அந்தோனியார் உள்ளிட்ட தேர்களை தேர்களுக்கு உரியவர்கள் சுமந்து வர புனித மகிமை மாதாவின் திருத்தேர் ஆடம்பர தேர் பவணியாக திருத்தலத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
பின்னர் வான வேடிக்கைகள் முழங்க லட்சக்கணக்கான மக்கள் மரியே வாழ்க என தங்களது கைகளை உயர்த்தி வேண்டுதல்களையும் நேர்த்திக்கடனையும் செலுத்தினர். ஆவடி காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையிலான, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவினை பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் பங்கு மக்கள் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு