திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப., அறிவுரையின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி, பத்தமடை பகுதியில் உள்ள இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பத்தமடை உதவி ஆய்வாளர் செய்யது நிசார் முகமது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், “காவல் உதவி செயலி” குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்