தூத்துக்குடி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் இன்று (31.10.2025) போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி பாராட்டினர்.
அதன்படி காடல்குடி காவல் நிலைய வளாகத்தில் காவல்துறையினர் மரக்கன்று நட்டியும் மற்றும் ஓட்டப்பிடாரம், சங்கரலிங்கபுரம், குலசேகரன்பட்டினம், கடம்பூர், புதூர், தாளமுத்துநகர், கோவில்பட்டி கிழக்கு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போலீசார் மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, மினி மாரத்தான், மரக்கன்று நடுதல், பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கியும் பாராட்டினர்.
















