திருவள்ளூர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” எனும் நிலையை உருவாக்கும் முயற்சியாக இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காணொளி வாயிலாக உரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போதை இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதே வேளையில் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் அகத்தியன் முன்னிலையில் காணொளி காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள், சமூக தன்னார்வூர் அமைப்பினர் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர்போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் பதாகைகளை ஏந்தி பேரணியாக பழவேற்காடு மதுபான கடை பகுதி வழியாக மார்க்கெட் பகுதியை கடந்து மீன் மார்க்கெட் அருகில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு சென்று அங்கு பொதுமக்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள், பழவேற்காடு மக்கள் செயல்பாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஹாஜா மொய்தீன், சி.எம்.ரமேஷ், லல்லி பாலாஜி, மஞ்சு, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எத்திராஜ், சசிகுமார், பழவேற்காடு கலைகளின் கலைக்கூடம்
செயலாளர் ஷிஹான் என்.சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு