நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சேகர் (50) இவர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதியினருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் (14), வயது பள்ளி மாணவி உள்ளார். மாணவியை பள்ளிக்கூடத்திற்கு சேகர் காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக மாணவியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியின் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் சேகர் மாணவிக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்ததும் வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். மாணவி யாரிடமும் இது குறித்து எதுவும் சொல்லாதது தெரிய வந்தது. இது தொடர்ந்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி.சரஸ்வதி, தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேகரை குண்டர் சட்டத்தில் கைது
செய்து சப்-ஜெயிலில் அடைத்தனர்.