திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் காரணமாக மாணவி தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள நகைகளையும் மாணவரிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டில் நகைகள் மாயமானதை அறிந்த பெற்றோர் வத்தலக்கண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் மாணவியை மிரட்டி நகையை அபேஸ் செய்த மாணவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாணவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















