திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கிழவனேரியை சேர்ந்த தேவதாஸ் (50). என்பவர் (19.10.2024) அன்று ஒரு கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து “போலீஸ் அக்கா” திட்டத்தில் பணிபுரிந்த வள்ளியூர் முதல் நிலை காவலர் செல்வ புனிதாவிடம் மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
புகார் குறித்து பெண் காவலர் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க காவல் உதவி ஆய்வாளர், சகாய ராபின் சாலு, உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தேவதாஸ் (21.10.2024) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்