திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து கௌரவித்த திண்டுக்கல் ஆய்வாளர் திரு.சேது பாலாண்டி அவர்கள். உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு பள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த காவல்துறையினர் சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அச்சமின்றி சமுதாயத்தை எதிர் கொள்ளவும் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து ஆய்வாளர் பாலாண்டி, கேள்வி எழுப்பினார் அப்போது அங்கிருந்த மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் குறிக்கோள் என கூறினர். இதையடுத்து அந்த மாணவிகளை பாராட்டிய ஆய்வாளர் தனது இருக்கையில் அவர்களை அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் இச்செயல் மாணவிகளை வெகுவாக உற்சாகப்படுத்தியது.