மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , தல்லாகுளம் தீயணைப்பு துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.
தீயணைப்பு த்துறை மற்றும் ரெட் கிராஸ் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. தல்லாகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வெங்கடேஷன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.இதில், வெள்ள பாதிப்புகளின் போது பழைய பொருட்களைக் கொண்டு மீட்பு பணிகள் மேற்கொள்வது, தீவிபத்தின் போது தற்காப்பு நடவடிக்கை உள்ளிட்ட வைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் கூடாரம் அமைத்து தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.தனியார் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் நடத்திய இந்நிகழ்ச்சியில், பெரியவர்களும், சிறியவர்களும் நீர்நிலைக்கு அருகில் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். குட்டைகளில் குறைவான தண்ணீர் இருப்பதாக கருதி, அதில் இறங்கக்
கூடாது,குழியில் சகதிகள் நிறைந்திருக்கும். அதில் தவறி விழுந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியர் நீர்நிலைகள் அருகே செல்லும்போது, பாதுகாப்பிற்காக பெற்றோரை அழைத்து செல்ல வேண்டும். நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டால், கட்டணம் இல்லா தொலைபேசி எண்களான, 101, 112 ஆகிய எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, தீயணைப்பு நிலைய அலுவலர் விளக்கம் அளித்தார்கள்.
இதில், தல்லாகுளம் தீயணைப்பு துறை வீரர்கள், ரெட் கிராஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், அறிவழகன், ஆசிரியர்கள், தனியார் செவிலியர்கள் பயிற்சி பெறும் மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.