கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கிரியாடினின் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 80 மாணவ மாணவியர்கள் பயிலும் இப்பள்ளியில் வகுப்பறைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. புதிய வகுப்பறை கேட்டு கோரிக்கை வைத்தும் பயன் இல்லாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்