மதுரை: மதுரை பெருங்குடி அருகே அரசு உதவி பெறும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி கட்டணம் 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மின்சார கட்டணம், டியூசன் பீஸ் என 5000 ரூபாய் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சார்ந்தவர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்தப் போராட்டத்தை, ஒருங்கிணைத்த ஏழு மாணவர்களை நேற்று தற்காலிக மாக ஒழுங்கு நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே, போராட்டத்தில் ஈடுபடும் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என தெரிவித்திருந்த நிலையில் ,கல்லூரி நிர்வாகம் இது போன்ற நடவடிக்கை எடுத்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் போது, ஏழு பேர் மீதான தடை நீக்க வேண்டும் கல்லூரி நிர்ணய கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி