விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ,நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளை , மாவட்ட ஆட்சியர் சந்தித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் சுரபி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு, மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கற்றல் திறன், அடிப்படை வசதிகள், தினமும் வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாணவர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். மேலும், உண்டு. உறைவிடப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் தங்கி படிக்க வாய்ப்பு வழங்க ஆவண செய்யுமாறு மாணவிகள் ஆட்சியரிடம்கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில், சுரபி நிறுவனத் தலைவர் விக்டர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி