தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே மக்களின் காவலன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மக்களின் காவலன் மற்றும் போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் தங்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் அக்கா தொடர்பு எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம் என்றும், நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவ மாணவிகள் குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது நடைபெறுவது தெரிய வந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம் மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சியும் எடுப்போம் என்று உறுதிமொழி ஏற்படுத்துக் கொண்டனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காவல் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 தொடர்பு கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.