திருப்பத்தூர் : அரசுப்பள்ளியில் மேல்நிலை கல்வியாக தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி இயந்திர தொழிற்கூடங்களில் 10 நாள் பயிற்சியளிக்க அரசு உத்தரவிட்டதையடுத்து திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயந்திரவியல் மாணவர்கள் அருகில் உள்ள டி.வி.எஸ். தொழிற்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டு இயந்திரங்கள் குறித்தும் வேலைகள் குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டனர். உள்ளுறை பயிற்சி வகுப்புகளுக்கு தொழில்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். இதன் நிறைவு நாள் விழாவான மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவசைலம் தலமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காவல் சார்பாய்வாளர் செல்வபிரபு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி தொழிற்கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினார். மேலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பயிற்றுனர்களாக சரவணன், பூமிநாதன் மகேஷ்மனோஜ், நாகராஜ், சிவா ஆகியோர் செயல்பட்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி