தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நல்வழிப்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ் இனியன் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ் விழிப்புணர் நிகழ்ச்சியில் தீய வழியில் செல்லாமல், சாதிய பாகுபாடு இல்லாமல், உடன் பயிலும் அனைத்து மாணவர்களையும் நேசிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் அவ்வாறு நேரிட்டால் அவற்றிற்கு வன்முறை என்றும் தீர்வாகாது என்றும், ஒருவர் மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் என்றும் எடுத்துரைத்து காவல்துறை உங்கள் நண்பன் இன்றும் அனைத்து பிரச்சனைகளையும் சட்டம் மற்றும் நீதித்துறை மூலமாக கையால வேண்டும் என்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.