திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் மாணவ மாணவியருக்கான குற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய பொழுது, மாணவ மாணவிகள் கைப்பேசிகளில் முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய இணையவழிகளை கையாளும்போது கவனமாக இருக்கவும், உரிய உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் இருக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் பெற்றோர்கள் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கக் கூடாது, என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இது போன்ற இணையதள குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்