தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் – 14 சிறுவர் மன்றங்கள் போலீஸ் பாய்ஸ் கிளப் களில் 651- சிறுவர்களும் மற்றும் 289 – சிறுமிகளும் மொத்தம் 940 பேர் மன்றம் மூலம் பராமரிக்கப்படும் மற்றும் பயன் பெற்று வருகிறார்கள் மன்றத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களை ஊக்குவிக்கவும் அவர்களது திறமைகளை வளர்க்கவும் இந்திய அளவில் பங்கு பெற வைக்கவும் கபடி, கைப்பந்து, கால்பந்து, பந்து எரிதல், 100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்ட பந்தயம், போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்த தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அமல்ராஜ் அவர்கள், ஆலோசனை வழங்கி இருந்தார்கள். அதன் பெயரில் கண்ணகி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் (25/3/2023), ஆம் தேதி காலையிலிருந்து மாலை வரை தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை, சங்கர் நகர், பீர்க்கன்கரணை, மணிமங்கலம், பள்ளிக்கரணை, செயலையூர், செம்மஞ்சேரி, பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு இடையே தொடர் ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம், கால்பந்து, கைப்பந்து, மற்றும் கபடி போன்ற போலீஸ் பாய்ஸ் கிளப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் கண்ணகி நகர் குழு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை தட்டி சென்றது மேலும் இப்போட்டியில் 475 சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் 11 குழுக்கள் கலந்து கொண்டார்கள் இப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இக்குழுக்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் நீதி போதனை போதனை கதைகள் உட்பட புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்