சென்னை : மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ‘டியூஷன் மாஸ்டருக்கு’ ஓராண்டு சிறை தண்டனை விதித்து, ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெரம்பூர், ஜார்ஜ் காலனியைச் சேர்ந்தவர், லோகநாதன், (42), அதே பகுதியில் டியூஷன் சென்டர், நடத்தி வந்தார். கடந்த 2018ல், அங்கு படிக்க சென்ற 15 வயது மாணவருக்கு, லோகநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து, சிறுவனின் தந்தை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், வழக்கு பதிந்து விசாரித்த லோகநாதனை ,கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும், ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, லோகநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.