மதுரை: மதுரை, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். மதுரை, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கிழக்கு தொகுதி சார்பில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அலங்காநல்லூரை சேர்ந்த மாடுபிடி வீரர் பாண்டி என்ற கோபி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மாடு முட்டி தூக்கி வீசியதில், உள்ளுறுப்புகள் சேதமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாடு முட்டி தூக்கி வீசியதில் உடல் உள் உறுப்புகள் சேதம் அடைந்ததால் படுகாயம் அடைந்து இளைஞர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி