கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டர் பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து மாடு மேய்த்து வருவதாகவும் (16.05.2025) ஆம் தேதி சுமார் மாலை 5.00 மணிக்கு இரண்டு மாடுகளை மாட்டு கொட்டாயில் கட்டி வைத்துவிட்டு (17.05.2025) ஆம் தேதி காலை சுமார் 05.00 மணிக்கு மாட்டு கொட்டாய்க்கு சென்று மாட்டை பார்த்த போது மாடு காணவில்லை என அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தேடிப்பார்த்து எங்கும் கிடைக்கவில்லை என சந்திரசேகர் பேரிகை காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து மாடு திருடிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்