தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்பொழுது கன மழை பெய்து வருவதை முன்னிட்டு மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் கோவில்பட்டி பகுதிகளில் வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள இடங்கள், கோவில்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழை நீரையும் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டி பகுதியில் பெரிய பாலம் ஓடை ஆகிய பகுதிகளில் இன்று நேரில் சென்று பார்வையிட்டு குளத்தின் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து, குளத்தின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.