கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் கண்ணப்பன் என்பவர் கிருஷ்ணா சூப்பர் ஸ்டோர் நடத்தி வருவதாகவும் குற்றவாளி சந்தூர் கம்பெனி சேல்ஸ்மேன் என்று கூறிக்கொண்டு கடையில் ஸ்டாக் பார்ப்பதற்காக வாரத்திற்கு ஒரு நாள் வருவதாகவும் ஸ்டாக் பார்ப்பது போல் கடையில் உள்ளே சென்று மளிகை பொருட்களை தனது பேக்கில் திருடி வைத்துக்கொண்டு சென்றுள்ளான் என (23.11.2024) ஆம் தேதி சிசிடிவி கேமராவில் பார்த்தபோது தொடர்ந்து இவ்வாறு திருட்டு செய்வது தெரிய கண்ணப்பன் ஊத்தங்கரை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.