கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளியில் மளிகை கடை நடத்தி குடிநீர் கேன் விநியோகம் செய்து வந்தவர் திம்மராஜ்(40). நேற்று மாலை பேகேப்பள்ளியில் உள்ள அண்ணனின் ஓட்டலுக்கு சென்றபோது முகக்கவசம் அணிந்து வந்த மூன்றுபேர் திம்மராஜை சரமாரியாக வெட்டி தப்பி உள்ளனர். பலத்த காயங்களுடன் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திம்மராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிப்காட் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்