தேனி: கம்பம் பகுதியில் இருந்து அதிகமான அளவில் கஞ்சா சப்ளை நடப்பதாக தேனி எஸ்.பி.திரு.பிரவீன் உமேஷ் டோங்ரேவிற்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கஞ்சா விற்பவர்கள், ரகசியமாக கண்காணிக்க உத்தரவிட்டிருந்தார்.இதன் அடிப்படையில் தனிப்படையினர் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பவர்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று கம்பம் புதுப்பட்டி மலையடிவாரத்தில், உள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கல் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் மோப்ப நாய் சோதனையுடன் உள்ளே நுழைந்தபோது தோட்டத்தில், வைக்கப்பட்டிருந்த 52 கிலோ கஞ்சா சிக்கியது. இதனை பதுக்கியவர்கள் யாரென்று, தெரியவில்லை.
சம்பவ இடத்தில் தேனி எஸ்.பி.திரு.டோங்ரே, உத்தமபாளையம் டி.எஸ்.பி. திருமதி.உமாதேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து குற்றவாளிகள் யார் என விசாரணை நடக்கிறது.