தேனி: தேனி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள், மலைகளுக்கு நடுவே, அதிகமான அளவில் ஊரடங்கை பயன்படுத்தி கள்ளசாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தினமும் போலீஸார் ரோந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, அமச்சியாபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கீழ் உள்ள மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள் உள்ளிட்டவற்றில் இரவு நேரத்தில் சாதாரண உடையில் சென்ற போலீஸார், கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அனைத்து மலைப்பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.