தேனி: தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் இதயம் அறக்கட்டளை இணைந்து பெரியகுளம் பகுதியில் வாழும் மலைக்கிராம பொதுமக்களை தேடிச் சென்று கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்
தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அங்கு வாழும் சுமார்60 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கினர்.
இதனையடுத்து இங்குள்ள பழங்குடியின கிராம பொதுமக்கள் தேனி மாவட்ட காவல்துறைக்கு தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்