திண்டுக்கல் : தமிழக காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து கடந்த நவம்பர் மாதம் மறைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 1997 ஆம் ஆண்டு காவலராக பயிற்சி முடித்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் தங்களது பங்களிப்புத் தொகையாக ரூபாய் 14, 85 500 இன்று அவரது மனைவி மற்றும் மகன்கள் தாய் தந்தையர் வசம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா