அரியலூர்: மறைந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. அன்பழகன் அவர்களின் உடலுக்கு, (01.02.2026) இன்று, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்வின் போது, மறைந்த காவல் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையில் அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்பட்டு, அவரது மறைவுக்கு காவல் துறை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
















