திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் போலி நிலப்பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, (16.02.2026) அன்று ஆரோக்கியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் கீழ்புறம் சிபிஐ (எம்) மாவட்டச் செயலாளர், ஸ்ரீராம் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 276 (231) பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















