திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி சந்தியா(29). கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா