திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஹெல்மெட் அணிந்தபடி கலாவதி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து இழுத்த போது கலாவதி கூச்சலிட்டபடி திருடனின் கையிலிருந்து நகை முழுவதும் இழுத்து கலாவதி கீழே விழுந்தவுடன் செயின் திருடன் தப்பி ஓடிய நிலையில் அருகில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு கலாவதியை மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று பின்னர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு