திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே களத்தூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி செல்வபாண்டி(43). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வேலை முடித்துவிட்டு மில் வேனில் களத்தூர் பகுதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் செல்வபாண்டி கழுத்தில் அணிந்திருந்த 6. 1/2 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா