விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சுள்ளங்குடி பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சங்கிலி (42). இவர் இசலி அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் (டிச.25) இரவு 10 மணியளவில் வழக்கம் போல பணிமுடிந்த நிலையில் கடையை பூட்டி விட்டு கடையில் இருந்த நேற்றைய கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாளின் மதுபான விற்பனை தொகையான ரூ.1 லட்சத்து 3000 ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது டாஸ்மாக் ஊழியர் சங்கிலி இருவர்குளம் அருகே சென்று தனது டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் மற்றொரு டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியர் சங்கிலியின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய நிலையில் அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இதனால் நிலைகுலைந்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர் சங்கிலி தன்னிடமிருந்த செல்போன் மூலமாக உடனடியாக இந்த கொள்ளை சம்பவம் குறித்து நரிக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் நரிக்குடி இன்ஸ்பெக்டர் நம்பிராஜன்,திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,திருச்சுழி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாராணி, மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் அரசு டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற மர்ம திருட்டு ஆசாமிகளை பிடிக்கும் பணியில் விரைந்து செயல்பட்டனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 நபர்களை அதிரடியாக தூக்கிய தனிப்படை போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்தது சம்மந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கர்ணன்