தேனி: தேனி மாவட்டம்அருகே குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மனைவி பாண்டியம்மாள் (64). இவர், தோட்டத்தில் வேலைகளை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து சுமார் மதியம் மூன்று மணிக்கு மேல் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது, அடையாளம் தெரிந்த, விலாசம் தெரியாத இருபது வயது மதிக்கத்தக்க ஒருவர் கன்னத்தில் அடித்து முடியை பிடித்து இழுத்து முதியவர் கழுத்தில் போட்டிருந்த சுமார் இரண்டு பவுன் தங்கச் செயினை மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து முதியவர் பாண்டியம்மாள் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மார்பா நபரை வலைவீசி தேடி வருகின்றனர்