திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து சூர்யா மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர். சமீபகாலமாக ஒரு இளம்பெண் சூர்யாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சூர்யா சென்று வந்துள்ளார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சூர்யாவின் செல்போனில் அவருக்கு அடிக்கடி போன் செய்து பேசிய மேலும் 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அவரது அறைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து விடுதி ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.