தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்டலாம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சக்திவேல் இவரது மனைவி ஐஸ்வர்யா இவர்களது மகள் ரக்ஷிதா (03). இந்த குழந்தைக்கு பிறவியிலேயே காது கேட்காது சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் உதவி கேட்கும் கிடைக்காத நிலையில் தருமபுரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரகுநாதன் அவர்கள், சக்திவேலுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை பெற்று தந்து பின்னர் தனியார் ENT. மருத்துவர் செந்தில் குமாரிடம் அழைத்துச் சென்று குழந்தைக்கு பரிசோதனை செய்துள்ளார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவிடம் பரிசோதனை செய்தனர். அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரகுநாதன் அவர்கள் சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள Madras ENT Research Foundation -ல் உதவி கோறினார். இதையடுத்து சக்திவேலின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது தற்போது குழந்தை நலமுடன் உள்ளார்.
இதை அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்கள் மற்றும் தருமபுரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் , ஆய்வாளர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் திரு.ரகுநாதன் அவர்களை பாராட்டி வருகின்றனர். இது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரகுநாதன் கூறுகையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தருமபுரியில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது விதிமுறை மீறி வாகனத்தை ஒட்டி வந்த சக்திவேல் என்பவரை பிடித்து அறிவுரை வழங்கிய போது அவர் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி கூறியுள்ளார். மேலும் தன் குழந்தை பிறவிலேயே காது கேட்கவில்லை அதற்கு சிகிச்சை பெற பணம் இல்லாமல் தவித்து வருவதாக கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு மனம் உருகிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.ரகுநாதன் அவர்கள், தருமபுரியில் உள்ள மருத்துவக் குழுவிடம் அனுப்பி முழுமையாக பரிசோதனை செய்து முன்னதாக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்றுக் கொடுத்துள்ளார். சென்னையில் 10 வகையான CT ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து குழந்தையின் மருத்துவ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒரு வாரம் கழித்து “ஸ்பீச் தெரபி” பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைக்கு விரைவாக பேச்சு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.