திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் படி, தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா முன்னிலையில் மானூர் வட்டக் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ கழிவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி நடத்தப்பட்டது.
அதில் மானூர் வட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பிற சுகாதார அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாண்டு அகற்றுவது என்பது பற்றியும், மருத்துவ கழிவுகளை முறையின்றி கையாளுவது மூலம் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துவதால் மருத்துவக் கழிவுகளை சட்டத்திற்கு உட்பட்டு முறையாக கையாள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்