தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மனோகரன், வீரா, நடராஜன் ஆகியோர் 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய மனோகரன் வீரர,நடராஜன் ஆகியோர் மருத்துவர் சரவணன் பார்த்திபனை கும்பகோணத்திற்கு வந்து பணத்தை பெற்று செல்லும்படி கூறவே மருத்துவர் கும்பகோணத்திற்கு வந்துள்ளார்.
வந்த இடத்தில் வழக்கறிஞர்கள் மருத்துவர் பெயரிலேயே தங்கும் அறை பதிவு செய்ததுடன் மருத்துவரிடம் இருந்து செல்போன் அவர் வைத்திருந்த நகைகளை பறித்துக் கொண்டதுடன் மேலும் பணம் கேட்டு அவரது செல்போன் மூலம் அவரது மனைவியிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அவரது மனைவி மீராஜாஸ்மின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்துவிட்டு இன்று அதிகாலை கும்பகோணம் வந்துள்ளார்.
தூத்துக்குடி காவல்துறையினர் கும்பகோணம் காவல்துறையினருக்கு தகவல் தரவே ,மருத்துவரின் செல்போன் மூலம் இருப்பிடத்தை அறிந்து மருத்துவரை மீட்டனர்.
மீட்கப்பட்ட மருத்துவர், வழக்கறிஞர்கள், உள்ளிட்டோருடன் கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.