திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த காந்தி மகன் சிவன்(23). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















